close
Choose your channels

நயன்தாராவின் 'அறம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

Tuesday, September 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான 'அறம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'U' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 3 நிமிடங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதால் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும், அனேகமாக அக்டோபர் 18ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள சமூக பிரச்சனை ஒன்றை அலசும் இந்த படத்தை மீஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.