close
Choose your channels

ஷங்கரின் சூப்பர்ஹிட் வெற்றிப்படத்தின் 2ஆம் பாகத்தில் நயன்தாரா?

Tuesday, March 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ’ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1993-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜூன், மதுபாலா நடிப்பில் உருவான திரைப்படம் ’ஜென்டில்மேன்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை இயக்குபவர் யார்? ஹீரோ யார்? என்பது குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.