close
Choose your channels

'கதிஜா'  சமந்தாவுக்கு  'கண்மணி'  நயன்தாரா கொடுத்த அசத்தலான கிஃப்ட்!

Thursday, March 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொடுத்த கிப்ட் குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாக்கிய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாராவும் கதிஜா என்ற கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் ஏப்ரல் இறுதியில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போதே நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நெருக்கம் ஆகி விட்ட நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தோழி சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்து அட்டை மற்றும் காதணியை கிஃப்ட்டாக வழங்கி உள்ளார்.

இதுகுறித்த வாழ்த்து அட்டையில் சமந்தாவின் கேரக்டரான கதிஜாவை குறிப்பிட்டு 'டியர் கதிஜா, வித் லவ் கண்மணி’ என தனது வாழ்த்துக்களை நயன்தாரா தெரிவித்துள்ளார். இதற்கு சமந்தாவும் தனது நன்றியை நயன்தாராவை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.