close
Choose your channels

'ஓ மை கோஸ்ட்' படத்தில் சன்னிலியோன் கேரக்டர் இதுதான்: இயக்குனர் தகவல்!

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ’ஓ மை கோஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சன்னி லியோன் சென்னை வந்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் தனது பகுதியின் படப்பிடிப்பை சன்னிலியோன் முடித்துவிட்டதாக இயக்குனர் யுவன் தெரிவித்துள்ளார். மேலும் ’ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் ஒரு ஃபேன்டஸி படம் என்றும் இந்த படத்தின் கதையை கூறும்போது சன்னி லியோன் விழுந்து விழுந்து சிரித்தார் என்றும் அதிலிருந்து அவர் இந்த படத்தின் கதையை மிகவும் ரசித்தார் என்பது உறுதியாகியுள்ளது என்றும் யுவன் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்தில் சன்னி லியோன் ராணி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த கேரக்டருக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்ததாகவும் இயக்குனர் யுவன் கூறியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.