close
Choose your channels

பா ரஞ்சித் உடன் மோதும் பிரபல நடிகர்: வைரலாகும் புகைப்படம் 

Monday, November 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ என்ற படத்தை கடந்த 2018ஆம் ஆண்டு இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ‘சல்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குத்துச் சண்டை வீரராக நடிக்கும் ஆர்யாவுக்கு குத்துச் சண்டை காட்சியில் நடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் பா.ரஞ்சித் இருக்கும் இந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது

மேலும் இந்த திரைப்படம் பீரியட் படமாக இருக்கும் என்றும் இந்த புகைப்படத்தில் கடந்த 80களில் வந்த ’புவனா ஒரு கேள்விக்குறி’ ’கவிக்குயில்’ ’மன்மதலீலை’ போன்ற திரைப் படங்களின் போஸ்டர்கள் இருப்பதால் இந்த பீரியட் படம் என்பதும் தெரிய வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.