close
Choose your channels

ஒருமையில் கேள்வி கேட்ட ரசிகருக்கு பார்த்திபனின் கண்ணியமான பதில்!

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் இந்த டிரைலருக்கு பின் படத்தை அதிகளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகரின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் 'அசுரன்' திரைப்படத்தின் டிரைலர் குறித்து ஒருமையில் அநாகரீகமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு யாராக இருந்திருந்தாலும் உடனே டென்ஷன் ஆகியிருப்பார்கள். ஆனால் ரொம்ப கூலாக பார்த்திபன் அளித்த பதில் இதோ: பார்த்தேங்க சார், அசுரத்தனமா இருந்தது.Super performance by mr danush இயக்குனருக்கு 6மணிக்கே Msg அனுப்புனேங்க சார்! மற்றும், 'a journey of fakir' பாத்துட்டு (துட்டு குடுத்து) நான் கை தட்னது ஊருக்கே கேட்டுது! என்று பதிலளித்துள்ளார்.

மேலும் கேள்வி கேட்ட நபர் ரஜினி, தனுஷ் ரசிகர் என்பதை அறிந்த பார்த்திபன், 'ரஜனி சாரின் ரசிகர்கள் அனைவருக்கும், உங்களில் நானும் ஒருவன்! இத்துடன் இப்பிரச்சனையை விடுவோம். விரைவில் சாரே படம் பார்த்து தம் கருத்தை தெரிவிப்பார், காத்திருப்போம்! நன்றி! என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.