close
Choose your channels

பெண் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதையும், இந்தப் படத்தின் டைட்டில் இன்று வெளியாக இருப்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் ’பெண்குயின்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணியாக இருப்பது போல் தெரிகிறது. எனவே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கேரக்டர் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் பழனிஒளிப்பதிவில், அணில் கிரீஸ் படத்தொகுப்பில் சக்தி வெங்கட்ராம் கலை இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.