close
Choose your channels

பிரபுதேவாவின் முதல் போலீஸ் பட டைட்டிலில் போலீஸ் அதிகாரி

Wednesday, July 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு 'பொன்மாணிக்கவேல்' என்ற டைட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணிபுரிந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான பொன்மாணிக்கவேல் அவர்கள் கடந்த சில மாதங்களாக எடுத்த அதிரடி நடவடிக்கைகள் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்திற்கு அவருடைய பெயரே டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.

முகில் செல்லப்பன் எழுதி இயக்கும் இந்த படத்தை நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கின்றனர். டி.இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.