close
Choose your channels

'ராட்சச மாமனே, ராத்திரியின் சூரியனே.. 'பொன்னியின் செல்வன்' லிரிக் பாடல் ரிலீஸ்!

Tuesday, September 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இருந்து வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற ’ராட்சச மாமனே, ராத்திரியின் சூரியனே.. என்ற லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் ஒரு சில வரிகள் இதோ:

மொத்தத்திலே சித்தத்திலே தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள புத்தி வைக்க வந்தேன்

ராட்சச மாமனே ராத்திரியில சூரியனே
கோவைப்பழம் போல் நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி தேர புத்தி தான்

ஓர் வீரன் வீரன் வீரன் எங்க மாமன் வீரன்
ஆலமரம் வேரை போல ஆழமான தீரன்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கபிலன் பாடல் வரிகளில் ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் ஆகியோர் குரலில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos