close
Choose your channels

'பாகுபலி 2' வீடியோவை கசியவிட்ட வீடியோ எடிட்டர் கைது

Tuesday, November 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி' படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார்' என்ற ரகசியம் உள்பட அனைத்து விஷயங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் ஒருசிறிய வீடியோ க்ளிப் சமூக இணையதளங்களில் லீக் ஆகியது. மிகப்பெரிய பாதுகாப்பையும் மீறி இந்த படத்தின் க்ளிப்பிங்ஸ் லீக் ஆனது பாகுபலி 2' படக்குழுவினர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்டது
இந்த புகாரின்பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கிருஷ்ணா என்பவரை கைது செய்துள்ளனர். இவர் இந்த படத்தின் வீடியோ எடிட்டராக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.