close
Choose your channels

பிரபாஸின் 'கல்கி 2898AD'.. விஜய் பட டைட்டில் தான் பிரபாஸ் கேரக்டர்..!

Friday, March 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்து வரும் ‘கல்கி 2898AD’ என்ற படத்தின் பிரபாஸ் கேரக்டர் இன்று மாலை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் பிரபாஸ் கேரக்டர் பெயர் மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்திய சினிமாவின் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றான ‘கல்கி 2898AD’என்ற படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

பிரபாஸ் ஹீரோவாகவும் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாகவும் நடித்து வரும் இந்த படத்தில் அமிதாபச்சன், திஷா பதானி, தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் கேரக்டர் ’பைரவா’ என்று அறிவிக்கப்பட்டு அவரது அட்டகாசமான கெட்டப் குறித்த போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ‘பைரவா’ என்ற டைட்டிலில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை கூறுகிறது என்றும் எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்கப்பட்ட கதை தான் இந்த படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த படம் 9 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.