close
Choose your channels

பிரபாஸின் 'சாஹோ' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, June 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களுக்கு பின் நடிகர் பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் நாயகி ஷராதா கபூர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இந்த படத்தின் டீசர் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

பிரபாஸ், ஷராதா கபூர், நீல் நிதிஷ் குமார், அருண்விஜய், மந்த்ராபேடி, ஜாக்கி ஷெராப், டினு ஆனந்த், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஷங்கர் ஈஷான் லாய் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.