close
Choose your channels

'ஜவான்' பாடலுக்கு செம்ம ஆட்டம் போடும் ப்ரியா அட்லி, கீர்த்தி சுரேஷ்.. அட்லி என்ன செய்கிறார் பாருங்க..!

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’ஜவான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அட்லியின் மனைவி பிரியா அட்லி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் செம ஆட்டம் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’ஜவான்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், இந்த படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற ’ஹையோடா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட்டாகியுள்ளது. ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் அற்புதமான நடனத்தில் உருவான இந்த பாடலுக்கு ப்ரியா அட்லி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடனமாடிய வீடியோவை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் பிரியா அட்லி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடனமாடிய போது அட்லி இருவரையும் நாயுடன் சுற்றிவரும் காட்சியையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.