close
Choose your channels

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் போடும் ப்ரியா அட்லி: வைரல் வீடியோ!

Sunday, May 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பாடலுக்கு பிரபல இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி தனது தோழிகளுடன் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.

‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு விஜய் நடித்த ’தெறி’ ‘மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. தற்போது அவர் ஷாருக்கான், நயன்தாரா நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் அவர் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அட்லி மற்றும் அட்லியின் மனைவி ப்ரியா அட்லி ஆகிய இருவருமே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார்கள் என்பதும் அவ்வப்போது தங்களின் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்த ’சோலோ’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ரொஷம்மா’ என்ற பாடலுக்கு ப்ரியா அட்லி தனது தோழிகளுடன் செம நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.