close
Choose your channels

ஒரே இரவில் உலகப்புகழ் பெற்ற புருவ டான்ஸ் நடிகை

Monday, February 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷெரில் சமூக வலைத்தளங்களில் பல நாட்கள் டிரெண்டில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அளவுக்கு அவருடைய டான்ஸ் அனைத்து தரப்பினர்களையும் ஈர்த்தது

இந்த நிலையில் புருவத்தில் மட்டும் நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஒரே இரவில் ஒரு நடிகை உலகப்புகழ் பெற்றுள்ளார். ஆம், ப்ரியா பிரகாஷ் என்ற நடிகை நடித்த 'ஒரு ஆடார் லவ்' என்ற மலையாள படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த டீசரில் ப்ரியா பிரகாஷ் பள்ளி சீருடை அணிந்து சக மாணவர் ஒருவரை பார்த்து கண்ணசைத்தும், புருவ டான்ஸ் ஆடியும் உள்ள காட்சிகள் இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த டீசர் வெளியான ஒரே இரவில் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த மாபெரும் வரவேற்பை சற்றும் எதிர்பார்க்காத ப்ரியா பிரகாஷ், தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ஒரு ஆடார் லவ்' படத்தின் டீசருக்கு 4.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. இந்த ஆதரவிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் இதே ஆதரவை படத்திற்கும் ரசிகர்கள் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.