close
Choose your channels

தயாரிப்பாளர் சங்க பதவியை திடீரென ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா

Tuesday, December 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது சரியில்லை என்றும், அவர் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராளமாக தேர்தலில் போட்டியிடலாம் என்றும் சேரன் உள்பட ஒருசில தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா, நேற்று சென்னை-செங்கல்பட்டு விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த பதவியில் போட்டியிடுவதால், தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஞானவேல்ராஜா அறிவித்துள்ளார். சேரனின் கோரிக்கை விஷாலுக்கு மட்டுமே இருந்த நிலையில் ஞானவேல்ராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.