close
Choose your channels

நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்: மறைந்த கலைஞரை வணங்கிய புகழ்-பென்சியா தம்பதி!

Monday, September 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்கள்தான் எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும் என விஜய் டிவி மறைந்த கலைஞரின் புகைப்படம் முன் புகழ்-பென்சியா தம்பதிகள் வணங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ் என்பதும் இவர் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை, சமீபத்தில் புகழ் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபல நகைச்சுவை நட்சத்திரமாக இருந்த வடிவேல் பாலாஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென காலமானார். இதனை அடுத்து வடிவேலுவின் சிஷ்யனான புகழ் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தின் முன் புகழ்-பென்சியா தம்பதிகள் வணங்கிய புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவில் புகழ் கூறியிருப்பதாவது:

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா... என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.