close
Choose your channels

'புதிய பாதை' ரீமேக்.. ஆனால் பார்த்திபன் சொன்ன மெகா ட்விஸ்ட்..!

Sunday, March 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஹிட் ஆன பழைய திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திபன் இயக்கிய நடித்த ’புதிய பாதை’ படத்தையும் ரீமேக் செய்யப் போவதாகவும் ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்து அவர் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு பார்த்திபன் நடித்து இயக்கிய முதல் திரைப்படம் புதிய பாதை. சீதா நாயகியாக நடித்திருந்த இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை ரீமேக் செய்யப் போவதாக சமீபத்தில் ’அழகி’ படத்தில் விழாவில் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தை அப்படியே மீண்டும் படமாக எடுக்க போகிறேன் என்றும் மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் ’டார்க் வெப்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் என்னுடைய ’டீன்ஸ்’ படம் வெளியான பிறகு அந்த படத்தின் பணிகளை தொடங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

33 ஆண்டுகளுக்கு முன் நடித்த ஒரு படத்தின் ரீமேக்கில் அதே ஹீரோ மீண்டும் நடிப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தாலும் இதை எப்படி அவர் படமாக எடுக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.