close
Choose your channels

ஹாலிவுட் நடிகைகளையே தூக்கிச் சாப்பிட்ட நடிகை ராய் லட்சுமி… வைரல் புகைப்படம்!

Tuesday, September 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. “அரண்மனை“, “இரும்புகுதிரை“, “தாண்டவம்“, காஞ்சனா”, இரும்புக்கோட்டை“, “தாம் தூம்” போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து இருந்தார். அதோடு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “மங்காத்தா“ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இவர் நேற்றுமுன் தினம் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவான சைமா 2021 விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் நடிகை ராய் லட்சுமி அணிந்திருந்த உடை பலராலும் பாராட்டப் பட்டது. அடர்ந்த நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த உடையில் நடிகை ராய் லட்சுமி ஹாலிவுட் திரைப்பட நடிகைகளையே விஞ்சும் அளவிற்கு அழகு பதுமையாகக் காட்சி அளித்தார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “சிண்ட்ரெல்லா” திரைப்படத்தில் நடிகை ராய் லட்சுமி நடித்துள்ளார். ஹாரர் வகை திரைப்படமான இந்தப் படத்தில் அவர் 3 வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காரணமாக நீண்டநாட்கள் வெளியாகாமல் இருந்த இந்தத் திரைப்படம் தற்போது செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ராய் லட்சுமியின் திரைப்படம் வெளியாக உள்ளது. அதுவும் ஹாரர் திரைப்படத்தில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் ரோபோ சங்கரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.