close
Choose your channels

எனக்கு ஒகே தான்… லிவிங் டூகெதர் பற்றி பேசிய நடிகை ரைசா வில்சன்!

Thursday, November 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடலான இவர் இதற்கு முன்பே கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்திய தெற்கு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றார். அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி2“ படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு நடிகை ரைசா வில்சன் “பியார் பிரேமா காதல்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஹிட் அடித்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம்வருகிறார். அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ்ஷுடன் “காதலிக்க யாருமில்லை“, நடிகர் விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, நடிகர் பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ரைசா வில்சன் ரசிகர்களுடன் வீடியோ உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் “லிவ்விங் டூகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா?“ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, “லிவிங் டூகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார். நடிகை ரைசா வில்சனின் இந்தப் பதிலை கேட்ட ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.