close
Choose your channels

'தலைவர் 170' படத்திற்கு ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா? கோலிவுட் ஆச்சரியம்!

Monday, September 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் ’தலைவர் 170’ திரைப்படத்திற்காக அதைவிட அதிகமாக சம்பளத்தை லைகா நிறுவனம் அவருக்கு தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. ’ஜெயிலர்’ படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்து 80 கோடி ரூபாய் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’டான்’ படத்தின் இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் ’தலைவர் 170’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக லைகா நிறுவனம் ரஜினிகாந்த்துக்கு ரூபாய் 120 கோடி சம்பளம் தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே லைகா நிறுவனம் அஜித்துக்கு 105 கோடி சம்பளம் ’ஏகே 62’ படத்திற்காக வழங்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் விஜய் தற்போது அவர் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரஜினியும் தனது அடுத்த படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.