close
Choose your channels

'லால் சலாம்' படத்தின் 50 நிமிட காட்சிகளை பார்த்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

Thursday, April 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர்களுக்கு அவர் விருந்து வைத்தார் என்பதையும் புகைப்படங்களோடு வந்த செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த், ஜீவிதா, செந்தில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா இதுவரை எடுக்கப்பட்ட 50 நிமிட காட்சியை எடிட் செய்து தனது தந்தை ரஜினிகாந்துக்கு போட்டு காட்டி உள்ளார். இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் ஆச்சரியம் அடைந்து ’நமது குடும்பத்தில் இருந்து இப்படி ஒரு சிறப்பான இயக்குனரா? என்று ஐஸ்வர்யாவை பாராட்டியதாகவும் ரஜினியின் பாராட்டை கேட்டு ஐஸ்வர்யா பூரித்து போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’3’ மற்றும் ’வை ராஜா வை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’லால் சலாம்’ திரைப்படமும் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டு கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரியாக நடிகை ஜீவிதா நடிக்கவுள்ளதாகவும் 33 வருடங்கள் கழித்து தமிழ் திரைப்படத்தில் ஜீவிதா ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.