close
Choose your channels

இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு: ரஜினி வெளியிட்ட வீடியோ

Wednesday, March 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நேற்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் அதன்பின்னர் அளித்த பேட்டியில் தனக்கு பின்னால் ஆண்டவனை தவிர யாரும் இல்லை என்று கூறியதையும் பார்த்தோம்

மேலும் இன்னும் 16 மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தென்சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை வெளியிட்டு அதன் பின்னர் ஒரு  வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவ்து:

'அரசியல் மாற்றத்தை உருவாக்க ஆண்டவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். முழுமையாக நாம் மாற்ற வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.