close
Choose your channels

'எந்திரன் 2' படத்தில் நடிக்கும் பஸ் கண்டக்டரும், ஓட்டல் சர்வரும்

Friday, December 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஸ் கண்டக்ராக பணிபுரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பின்னர் படிப்படியாக சினிமாவில் நுழைந்து இன்று சூப்பர் ஸ்டாராக பிரமாண்டமாக காணப்படுகிறார்.


அதேபோல் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் சிறுவயதில் ஓட்டலில் செஃப் மற்றும் சர்வராக பணிபுரிந்துள்ளார். குரூப் டான்ஸ்கள், சிறுவேடங்கள், விளம்பரப்படங்கள் என படிப்படியாக வளர்ச்சி கண்ட அவர் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக விளங்கி வருகிறார்.

இவ்வாறு பஸ் கண்டக்ராக இருந்த ரஜினிகாந்தும், ஓட்டல் சர்வராக இருந்த அக்சயகுமாரும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'எந்திரன் 2' படத்தில் நடித்து வருகின்றனர்.

இதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து சில படங்களில் சிறு படங்களில் நடித்து வந்த ஷங்கர், 'ஜெண்டில்மேன்' படம் மூலம் இயக்குனராகி இன்று இந்தியாவில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மேலும் இளையராஜா, டி.ராஜேந்தர் ஆகியோர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து 'ரோஜா' என்ற படம் மூலம் இசையமைப்பாளராகி இன்று உலகின் மிகப்பெரிய விருது என கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு சொந்தக்காரராகியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்

இவ்வாறு ஆரம்பத்தில் ஏழ்மையாக இருந்து திறமையினாலும் உண்மையான உழைப்பினாலும் உயர்ந்த நான்கு பேர் பணியாற்றும் படம்தான் நேற்று முதல் தொடங்கப்பட்ட 'எந்திரன் 2' என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.