close
Choose your channels

கமல் தயாரிப்பில் உதயநிதி படம்: இயக்குனர் இந்த பிரபலமா?

Tuesday, August 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆர் மகேந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்த ’கிடாரி’ மற்றும் வெப்தொடரான குயின் ஆகியவற்றை இயக்கியுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.