close
Choose your channels

ராமர் பெயரில் சமுத்திரக்கனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. இணையத்தில் வைரல்..!

Monday, January 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்றைய தினத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் ’ஸ்ரீ ராமரின் தெய்வீக ஆசீர்வாதத்துடன்’ என்று நேற்று இந்த படம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த போஸ்டர் சமுத்திரக்கனியின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு ’ராமம் ராகவம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிருத்வி போலவரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இரு மொழிகளிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் சமுத்திரக்கனியின் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.