close
Choose your channels

டால்பினுடன் குடும்பத்தோடு கொஞ்சி விளையாடும் ரம்பா: வைரல் புகைப்படங்கள்!

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் டால்பினுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த 90 ஆண்டுகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், பிரசாந்த் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பா அவ்வப்போது தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் பஹாமா என்ற தீவுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். ’நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த சுற்றுலாவில் தான் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக ரம்பா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த தீவில் டால்பின் உடன் குடும்பத்தோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.