close
Choose your channels

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: நடிகைகளுக்கு ஐடியா கொடுத்த ரம்யா நம்பீசன்..!

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விவகாரம் இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து கொண்டு வருகிறது என்பதும் அவ்வப்போது பெரிய நடிகைகளே இது குறித்து பேசி உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் திரை உலகின் நடிகை மற்றும் பாடகி ரம்யா நம்பீசன் அட்ஜஸ்ட்மென்ட் என்று யாராவது கேட்க வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஐடியாவை தெரிவித்துள்ளார்.

திரை உலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்படி நடக்கும் போது அதை தைரியமாக நடிகைகள் எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப் பற்றி பேச வேண்டும்.

அதுமட்டுமின்றி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பவர்களிடம் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்து கொண்டு ’முடியாது’ என்று மறுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தைரியமாக பொதுவெளியில் நடிகைகள் பேச வேண்டும் என்று ரம்யா நம்பீசன் கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.