close
Choose your channels

தனுஷுடன் ரம்யா பாண்டியன்: வைரலாகும் புகைப்படங்கள்!

Friday, December 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படம் ’அட்ராங்கி ரே’ ரிலீசாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் தனுஷ் நடித்து உள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருக்கு பாலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் ’அட்ராங்கி ரே’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: சினிமா துறையில் உங்களது வெற்றிகரமான பயணம் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கிறது. நான் உங்களை எப்போதும் பின்பற்றுவேன். உங்கள் அபாரமான தொழில் நேர்மை மற்றும் உங்கள் திறமையால் நீங்கள் எங்களை பெருமை படுத்துகிறீர்கள். உங்களின் அடுத்த பாலிவுட் படமான ’அட்ராங்கி ரே’ ரிலீஸ் ஆவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ரம்யா பாண்டியன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷுடன் இணைந்து ரம்யா பாண்டியன் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.