close
Choose your channels

ரஷித்கானுக்கு பிடித்தது இந்த விஜய் பட பாடலா? ஆச்சரிய தகவல்!

Saturday, June 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான் தனக்கு பிடித்த தமிழ் பாடல் என விஜய் படத்தின் பாடல் ஒன்றை குறிப்பிட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் முக்கிய வீரராக உள்ளார் என்பது தெரிந்ததே. எனக்கு இன்னொரு வீடு ஹைதராபாத் என்று அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அவர் ரசிகர்களிடம் உரையாடிய போது தனக்கு பிடித்த தமிழ் பாடல் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் என்று கூறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல நாட்டின் கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது என்பது தெரிந்ததே. இந்த பாடலுக்கு இந்திய கிரிக்கெட் மகளிர் அணியினரும் கூட நடனம் ஆடியுள்ளனர். உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன இந்த பாடல் தற்போது ரஷித்கானையும் கவர்ந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.