close
Choose your channels

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை?

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பலர் தமிழிலும் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளது. ஏற்கனவே கார்த்தி நடித்த ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கவுள்ளார். இது ஏற்கனவே தெலுங்கில் வெளியான ‘ஜாதி ரத்னலு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் அவர் நடித்துவரும் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ திரைப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.