close
Choose your channels

ஹாலிவுட் படத்திற்கு தயாராகும் ராஷ்மிகா மந்தனா: வைரல் வீடியோ!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் ஹாலிவுட் படத்திற்கு தயாராகி வருவது போன்ற வீடியோ ஒன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்களது செல்ல நாய்க்குட்டி உடன் சண்டை போடுவது போன்ற காட்சி உள்ளது.

அவெஞ்சர் உள்பட ஹாலிவுட் திரைப்படங்களில் விலங்குகளுடன் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் சண்டை போடுவது போன்ற காட்சி பிரமாண்டமாக உருவாக்கப்படும் என்ற நிலையில் அது போன்ற படங்களுக்கு தயாராகி வருவதாக ராஷ்மிகா காமெடியாக கேப்சனில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ வெளியாகி ஒரு சில மணி நேரங்களே ஆகியிருக்கும் நிலையில் பத்து லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.