close
Choose your channels

'இந்தியன் 2' திரைப்படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Tuesday, July 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் லொகேஷன் தேடும் பணியில் தற்போது ஷங்கர் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரவிவர்மன் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து இவர் விலகியதற்கான காரணம் தெரியவில்லை. அவருக்கு பதிலாக 'இந்தியன் 2' படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேல் பணிபுரியவிருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது. ரத்னவேல் ஏற்கனவே ஷங்கருடன் 'எந்திரன்' படத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அரசியல் த்ரில் படமான 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரித்திசிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானிசங்கர், சித்தார்த், வித்யூத், நெடுமுடி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையில் லைகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்த படம் வரும் 2021ஆம் ஆண்டு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.