close
Choose your channels

புளூசட்டை மாறனின் 'ஆண்டி இந்தியன்' படத்திற்கு இத்தனை 'கட்'களா? 

Thursday, May 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூபில் சினிமா திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்யும் புளூசட்டை மாறன் என்பவர் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க முடியாது என்று தெரிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து அவர் ரிவைசிங் கமிட்டிக்கு சென்ற நிலையில் இந்த படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் இந்த படத்தில் உள்ள 38 காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி இப்படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் இந்த படம் வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

38 கட்’கள் மற்றும் டைட்டிலை மாற்றினால் மட்டுமே இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் தருவதாக சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ‘ஆண்டி இந்தியன்’ திரைப்படம் சென்சார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் நேரடியாக ஓடிடியில் எந்தவித ‘கட்’களும் இன்றி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.