close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' நடிகர் காலமானார்.. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இரங்கல்...!

Tuesday, May 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’, இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆங்கிலேயர் சர் ஸ்காட் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. மேலும் அவர் ’தோர்’ உட்பட பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரே ஸ்டீவன்சன் நேற்று இத்தாலியில் காலமானார். அவரது மறைவுக்கு எஸ்.எஸ். ராஜமெளலி உட்பட ’ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ’அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி, ரே ஸ்டிவன்சன், நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள், எங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்’ என்று ’ஆர்.ஆர்.ஆர்’, படத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.