close
Choose your channels

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, December 31, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'ரெமோ' கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல் அனிருத் தற்போது 'தல 57' படத்தின் இசைப்பணியில் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் அனிருத் இசையமைத்த படமான 'ரம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படம் பிப்ரவரி 10ஆம் தேதி வெளிவருகிறது. அனிருத் இசையமைத்துள்ள முதல் த்ரில்லர் படம் 'ரம்' என்பதால் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரிஷிகேஷ், நரேன், சஞ்சிதா, மியா ஜார்ஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய்பரத் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்று 'யூ/ஏ' சான்றிதழ் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.