close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் ரஜினியின் 'தர்பார்' ரகசியம்

Thursday, April 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படம் குறித்த ஒருசில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் இன்னொரு வேடத்திலும் நடிப்பதாகவும், அந்த வேடம் சமூக சேவகர் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வயதான கெட்டப்புடன் மீசையில்லாத லுக்கில் அவர் தோன்றவிருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. 'தில்லுமுல்லு' உள்பட ரஜினிகாந்த் மீசையில்லாமல் நடித்த மிகச்சில படங்களில் ஒன்றாக தர்பார்' இருக்கும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு உள்பட ஒருசில நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.