close
Choose your channels

காமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ’பிரேமம்’ என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்த சாய் பல்லவி தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து ’மாரி 2’, ‘என்ஜிகே’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், சில மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்த சாய்பல்லவி தற்போது மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான ’பாவக்கதைகள்’ என்ற திரைப்படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார் என்பதும் அந்த படத்தில் அவர் நடித்த சுமதி கேரக்டர் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழ் காமெடி நடிகர் காளிவெங்கட் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தனுஷ் உள்பட பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த சாய்பல்லவி, காளி வெங்கட் ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.