close
Choose your channels

சாய் பல்லவி வீட்டில் நடக்கும் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Wednesday, January 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாய் பல்லவியின் சகோதரி தனது வருங்கால கணவரை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்.கே 21’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியின் சகோதரியை பூஜா என்பவர் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டு அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். மேலும் அவர் தற்போது சொந்தமாக பிசினஸ் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னுடைய பிசினஸ் பார்ட்னராக இருந்து வரும் வினீத் என்பவர் தான் தன்னுடைய வாழ்க்கை பார்ட்னர் ஆகவும் மாற உள்ளதாக பூஜா தெரிவித்துள்ளார். மேலும் வினீத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகை சாய்பல்லவி திருமணம் குறித்த தகவல் இப்போதைக்கு வரவில்லை என்றாலும் அவருடைய வீட்டில் ஒரு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.