close
Choose your channels

கடல் நிறத்தில் காஸ்ட்யூம்: சமந்தாவின் க்யூட் புகைப்படம் வைரல்!

Saturday, November 28, 2020 • தமிழ் Comments

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது மாலத்தீவில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார் என்பதும் மாலத்தீவில் இருந்து அவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஆகாயம், கடல் மற்றும் அவரது காஸ்ட்யூம் ஆகிய மூன்றுமே கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் உள்ளது

ஒரு பக்கம் கடல், இன்னொரு பக்கம் நீச்சல் குளம் நடுவில் நடந்து செல்லும் சமந்தாவின் அழகிய புகைப்படமும், பின்னணியில் இருக்கும் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த குடிசையும் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் சமந்தா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz