close
Choose your channels

விஜய்சேதுபதி பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்ட சமந்தா?

Tuesday, July 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில் உள்பட பல பிரபலங்கள் நடித்த படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட இயக்குனர் தியாகராஜா குமாரசாமி முடிவு செய்திருந்தார். ஆனால் இந்த படம் தெலுங்கில் டப் செய்வதை சமந்தா விரும்பாததால் அதற்கு அவர் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது

சூப்பர் டீலக்ஸ்' படத்தில் கணவனுக்கு துரோகம் செய்யும் ஒரு கேரக்டரில் சமந்தா நடித்திருப்பார். இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் வெளியானால் தனது இமேஜ் பாதிக்கும் என்றும், தனது கணவர் நாக சைதன்யாவின் ரசிகர்கள் அந்த கேரக்டரை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் இயக்குனரிடம் சமந்தா தெரிவித்தாராம். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இயக்குனர் தியாகராஜா குமாரசாமி, இந்த படத்தை தெலுங்கில் டப் செய்யும் முடிவை கைவிட்டுவிட்டாராம்.

சமீபத்தில் வெளியான சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் சமந்தாவின் இமேஜ் தெலுங்கு மாநிலங்களில் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற திரைப்படம் வருவது பொருத்தமாக இருக்காது என்றே அவரது ரசிகர்களும் கருதுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.