close
Choose your channels

சகுந்தலாவின் பிறப்பிற்கு ஒரு காரணம் உண்டு: சமந்தாவின் 'ஷாகுந்தலம்' டிரைலர்

Monday, January 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ‘ஷாகுந்தலம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அற்புதமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் ‘ஷாகுந்தலம்’ படத்தின் கதை சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மகாபாரதத்தில் ஒரு பிரிவான சகுந்தலை என்ற இந்த கதையை மகாகவி காளிதாசர் எழுதியுள்ளார். இந்த கதையை தழுவி தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் சகுந்தலையை மன்னன் துஷ்யந்தன் தற்செயலாக சந்தித்து காந்தர்வ திருமணம் செய்து கொள்கிறான். அதன் பிறகு நாடு திரும்பும் துஷ்யந்தன் விரைவில் சகுந்தலையை வந்து அழைத்து செல்வதாக கூறி ஒரு முத்திரை மோதிரத்தையும் கொடுக்கிறான். இந்த நிலையில் ஒரு முனிவரின் சாபம் காரணமாக சகுந்தலையை துஷ்யந்தன் மறந்துவிட, அரசன் கொடுத்த முத்திரை மோதிரத்தையும் சகுந்தலை தொலைத்து விடுகிறாள். இதன் பின் அவர்கள் எப்படி இணைந்தார்கள்? சாபவிமோசனம் எப்படி பெற்றார்கள்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

சமந்தா, தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, கெளதமி, அதிதிபாலன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மணிஷர்மா இசையில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் திரையரங்குகளில் தமிழ் உள்பட 5 மொழிகளில் ஒளியாக உள்ளது. இன்று வெளியாகியுள்ள இரண்டு நிமிடத்திற்கு மேலான டிரைலருக்கு பின் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.