close
Choose your channels

சுவிஸ் நாட்டில் சில்லுன்னு காத்து வாங்கிய சமந்தா: வைரல் புகைப்படம்!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா திரைப்படங்கள் நடிப்பதில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் சுற்றுலா செல்வதில் இன்னொரு பக்கம் பிஸியாக இருக்கிறார் என்பது தெரிந்ததே.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது தோழியுடன் காஷ்மீர், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா சென்று இருந்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது தோழியுடன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் சில்லுன்னு காத்து வாங்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு இலட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து உள்ளது.

தமிழ் தெலுங்கு மொழிகலீல் உருவாகும் 2 புதிய படங்களில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ள சமந்தா, ‘சாகுந்தலம்’, ’யசோதா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரை இயக்கிய ராஜ்&டிகே இயக்கத்தில் ஒரு தொடரிலும் சமந்தா நடிக்க உள்ளதால் 2022ஆம் ஆண்டு திரையுலகை பொறுத்தவரை சமந்தாவிற்கு ராசியான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.