close
Choose your channels

டாக்டர் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

Monday, November 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா தனது டாக்டர் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்து அவர் மன நிம்மதிக்காக வடநாட்டு கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் தற்போது மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ள சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா மேலும் இரண்டு தமிழ்,தெலுங்கில் உருவாகும் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டாக்டர் மஞ்சுளா அனகானி என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். கடினமான நேரங்களில் தான் உண்மையான நண்பர்கள் யார் என்று வெளிப்படுத்துகின்றன. உங்களை விட உண்மையான நண்பர் எனக்கு இல்லை. இன்று நீங்கள் அனைவராலும் எந்த அளவுக்கு நேசிக்கப்படுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என நடிகை சமந்தா தனது டாக்டர் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.