close
Choose your channels

சாண்டி மாஸ்டரை வேற லெவலுக்கு மாற்றிய 'லியோ' லோகேஷ்.. வைரல் புகைப்படம்..!

Wednesday, September 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தமிழில் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களின் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தளத்தில் ’லியோ’ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்

அந்த புகைப்படத்தில் சாண்டி மாஸ்டர் வேற லெவலில் சிக்ஸ் பேக்கில் இருக்கும் காட்சி உள்ளதோடு, ‘லியோ’வின் டேக்லைனையும் பதிவு செய்துள்ளார். Keep Calm & Wait for Loki's Magic என்று பதிவு செய்துள்ள இந்த டேக்லைனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையடுத்து சாண்டி மாஸ்டர் ’லியோ’ திரைப்படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அவருக்கு வேற லெவல் கேரக்டர் வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முதல் முறையாக அவரை சிக்ஸ் பேக்கில் ரசிகர்கள் பார்த்து ஆச்சரியமடைந்து இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.