close
Choose your channels

சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

Tuesday, January 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் நடித்த ’டகால்டி’ மற்றும் ’சர்வர் சுந்தரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 31ஆம் தேதி வெளிவரும் என விளம்பரம் செய்யப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் செய்யப்பட்டது.

பெரிய நடிகர்களே ஒரே நாளில் 2 படத்தை ரிலீஸ் செய்ய செய்வதில்லை. அவ்வாறு இருக்கும்போது சந்தானம் இரண்டு படங்களை ரிலீஸ் செய்வது ஆச்சரியமாக இருப்பதாக கோலிவுட் திரையுலகினர் கருத்து கூறி வந்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது இதனை அடுத்து வரும் 31ம் தேதி சந்தானம் நடித்த ’டகால்டி’ திரைப்படம் மட்டுமே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.