close
Choose your channels

உதயநிதியுடன் இணைந்து அரசியலா? சந்தானம் அளித்த ஸ்மார்ட்டான பதில்..!

Sunday, August 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதியிடம் பல திரைப்படங்களில் நடித்த நீங்கள் அவருடன் இணைந்து அரசியலில் ஈடுபட எண்ணம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் ஸ்மார்ட்டான பதில் அளித்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி அவர் நடித்த இன்னொரு திரைப்படம் ’கிக்’ என்ற படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சந்தானம், செந்தில், தம்பி ராமையா, முத்துக்காளை, கிங்காங், கூல் சுரேஷ், கோவை சரளா என ஒரு நட்சத்திர காமெடி பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் ’உதயநிதி உடன் பல திரைப்படங்களில் நடித்து அவரது படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த நீங்கள், உதயநிதி உடன் இணைந்து அரசியலில் ஈடுபட ஆசை உள்ளதா? என்று கேட்கப்பட்டது

இந்த கேள்விக்கு பதில் அளித்த சந்தானம் ’இது அன்பான கேள்வியா அல்லது ஆப்பு வைக்கிற கேள்வியா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை’ என்று ஸ்மார்ட்டாக பதில் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.