close
Choose your channels

'தளபதி 64' படத்தில் இணைந்த இளம் ஹீரோ!

Tuesday, October 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 64’ படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்துள்ளது குறித்து நேற்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. இதனை அடுத்து தற்போது கோலிவுட் திரையுலகின் இளம் ஹீரோக்களில் ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ள தகவல் கசிந்துள்ளது. அவர்தான் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’தளபதி 64’ படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருப்பதாகவும், அதே கல்லூரியில் மாணவனாக சாந்தனு நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. மேலும் விஜய்யின் பேராசிரியர் கெட்டப் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருப்பதாகவும் ஒரு சராசரி பேராசிரியர் போல் இல்லாமல் தனித்தன்மையுடன் கூடிய ஒரு கெட்டப் இந்த படத்தில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இளம் ஹீரோக்களுக்கு வாய்ப்பு அளிப்பதை கடந்த சில வருடங்களாக வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். ஏற்கனவே ‘பிகில்’ படத்தில் இளம் ஹீரோ கதிருக்கு வாய்ப்பளித்தது போலவே ’தளபதி 64’ படத்தில் அவர் சாந்தனுவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமாவது சாந்தனுவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.