close
Choose your channels

Mr.சந்திரமெளலி படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ

Friday, October 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணையும் Mr.சந்திரமெளலி திரைப்படத்தில் ரெஜினா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்பதும், இந்த படத்தில் பழம்பெரும் இயக்குனர்களான அகத்தியன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு ஹீரோ தற்போது இணைந்துள்ளார். அவர்தான் பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் ஹீரோ சந்தோஷ் பிரதாப். இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கின் நண்பராக சந்தோஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், இந்த படம் தனது திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இயக்குனர் திரு இயக்கத்தில் தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் வரும் டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.