close
Choose your channels

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக சேரன் படம்.. ஹீரோ இந்த மாஸ் நடிகரா?

Saturday, September 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தை இயக்குனர் சேரன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஹீரோவாக மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் ’பாரதி கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கியவர் சேரன் என்பது தெரிந்ததே.

கடந்த 2019 ஆம் ஆண்டு ’திருமணம்’ என்ற திரைப்படத்தை சேரன் இயக்கிய நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்க உள்ளார் என்பதும் இது அவரது 47வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ரத்தக்களறியான போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு மாஸ் நடிகருடன் இயக்குனர் ஆக சேரன் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகியுள்ள நிலையில், இந்த படம் அறிவிப்பு தினத்தன்றே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.